அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு விருப்ப இடமாறுதல் கிடைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. 

இதையடுத்து, ஒவ்வொரு பதவி நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் உத்தரவுகள், ஆன்லைன் வழியில் இறுதி செய்யப்பட உள்ளன. விருப்பமான இடங்களை ஆசிரியர்களே தேர்வு செய்யும் வகையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளதால், ஆசிரியர்களுக்கான பல்வேறு வகையான நிர்வாக மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதிகம் விரும்பும் காலியிடங்கள், நிர்வாக மாறுதலால் பூர்த்தியாகி விடாமல் இருக்கும் வகையில், நிர்வாக இடமாறுதல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. கவுன்சிலிங் முடிந்த பின், நிர்வாக மாறுதல் உத்தரவுகளை வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு