தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு*

 *தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு*



*1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.*



*2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை*


*3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.*


*4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.*



*ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,*


*1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.*



*2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ளவழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.*



*3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.*


*4) பொழுதுபோக்கு  கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/Amusement Park) 50% வாடிக்கையாளர்களு டன் செயல்பட அனுமதிக்கப்படுகிது*



*5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம்100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.*



*6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.*



*7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.*



*8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.*



*9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.*

Comments

Popular posts from this blog

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு