இன்று ( 15.12.2021 ) ஆணையர் மற்றும் இணை இயக்குநர் -பள்ளி பார்வை - ஆய்வு செய்தி-

    

இன்று ( 15.12.2021 ) ஆணையர் மற்றும் இணை இயக்குநர் -பள்ளி பார்வை - ஆய்வு செய்தி-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் இன்று காலை ஆய்வு. ஆணையர் நந்தகுமார் மற்றும் இணை இயக்குநர் செல்வக்குமார் பார்வை.

எமிஸ் படி ஆசிரியர் பெயர் எடுத்து எந்த பாடம் நடத்த வேண்டும் என்று கூறி வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவர்கள் உடன் அமர்ந்து பின்னர் கேள்வி கேட்டு வழிநடத்தினார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பாடு சொல்ல கேட்டுக் கொண்டார். பெருக்கல் கணக்கிட்டு செய்ய சொன்னார். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு கொடுத்து போடச் சொல்லி சரிபார்ப்பு செய்தார். பள்ளி சுற்றுப்புற தூய்மை பார்வை. நன்றாக செய்த ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து கொண்டார்

தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த அவர் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடம் எடுப்பதையும் மாணவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பதையும் கவனித்தார்.

சேதமடைந்த கட்டடங்களை பார்வையிட்டு இடித்து அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் அறிவுறுத்தினார். சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் மது அருந்துவதும், காலி பாட்டில்களை உடைத்து செல்வதால் மாணவர்கள் பாதிப்படையும் பெரும் பிரச்சினையாக இருப்பதாக தலைமையாசிரியர் பிச்சைமணி கல்வித்துறை ஆணையரிடம் தெரிவித்தார் .மேலும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் குறித்தும், கல்வித்தரம் உயர்த்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். திடீரென்று வகுப்பறைக்குள் நுழைந்து கடைசி பெஞ்சில் அமர்ந்து பாடங்களை கவனித்தால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Comments

Popular posts from this blog

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇

EMIS இணையதளம் மூலம் transfer apply செய்தவர்களுக்கு தற்பொழுது print option இல் பணிவரன்முறை தேதி சரியாக வருகின்றது