பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும்! தேதி அறிவிப்பு
- Get link
- X
- Other Apps
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜனவரி 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு முன்பே பொங்கல் பரிசு தொகுப்பை வெளியிட்டிருந்தது. வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு முன்பு குடும்ப அட்டைதார்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதியும் அறிவிப்ப்பட்டுள்ளது.
அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இதற்காக அரசு, ஆவின் நிறுவனத்திடம் 130 கோடி ரூபாய்க்கு நெய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெருமளவில் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தி.மு.க பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த தை பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து, ரூ.2500 வழங்கப்படும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பலர் வேலை இழந்து தவித்து வந்த நிலையில், மக்களின் நலன் கருதி இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ், அரிசி அட்டைதாரர்களுக்கு நிதியுதவி மற்றும் ரேஷன் கிட்(Pongal Gift) வழங்கப்பட்டது.
இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் முன்பை விட ஒப்பற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாட, வரவிருக்கும் ஆண்டில், பொங்கல் பரிசு ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது
- Get link
- X
- Other Apps
Comments