தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (மாநில அமைப்பு) ++++++++++++++++++++ பெறுதல் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6. மதிப்புமிகு ஐயா, வணக்கம். பொருள்:பயிற்சி- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு.. பார்வை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:பிடி1/இ2/2021-22/நாள்:06.01.2022 +++++ தங்களிடம் கீழ்க்கண்டவற்றை எங்களது மாநில அமைப்பு கோருகிறது. 1.கொரோனா நுண்கிருமி இமாலய வேகத்தில் பாய்ந்து பரவி வருவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு உள்ளது. போட்டித்தேர்வுகள் உள்ளிட்டு பல்வேறு வகைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.இத்தகு பெருந்தொற்று பரவல் வேகக்காலத்தில் 10.01.2022 முதல் வலுவூட்டல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது கவலையைத்தருகிறது. 2.கொரோனா நுண்கிருமி பரவல் வேகக் காலத்தில் ஒவ்வொரு பயிற்சி
Comments