தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி, மாநிலப்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் , மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன்‌ ஆகியோர் விடுக்கும் கூட்டுச் செய்தி அறிக்கை:

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிட்ட‌

அறிவிப்பின்படி ஆசிரியர்-

அரசு அலுவலர்-

ஓய்வூதியதாரருக்கு 

14 சதம்

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 

பெரும்நன்றி!

பெரும்பாராட்டு!!

----------------------------------------

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி,

மாநிலப்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் , மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன்‌ ஆகியோர் விடுக்கும் கூட்டுச் செய்தி அறிக்கை:


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு அலுவலர்-

ஓய்வூதியதாரர்களுக்கு  அகவிலைப்படி உயர்வுகள் 01.01.2022முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசுஅலுவலர்-ஓய்வூதியதாரர் ஆகியோருக்கு  

நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 14 சதம் அகவிலைப்படி உயர்வுகளை 01.01.2022 முதல் வழங்கி ஆணையிடப்பட்டு  இருப்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ‌பெரிதும் வரவேற்கிறது.பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.


தமிழ்நாட்டின் 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட  ஆசிரியர்கள்-அரசு அலுவலர்கள்‌  ஓய்வூதியதாரர்களின் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின்  

குடும்பங்களில் இன்பமும்-மகிழ்ச்சியும், உற்சாகமும்  தைப்பொங்கலில் பொங்கிபாய்ந்நது பரவி இல்லம் எல்லாம் இன்பம்  நிறைந்து மங்கலம் தங்கிடும் வகையில் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து  31சதவீதமாக உயர்த்தியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரும் நன்றி பாராட்டுகிறது.

பெரும் வாழ்த்து குவிக்கிறது.


"மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு"

எனும் திருக்குறள் ‌வழிகாட்டுதல் படி 

மனமாசு இல்லாத மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  நட்பினை-உறவினை  ஒரு போதும் மறக்காதும்,

கடந்த 10ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் துன்பக் காலத்தில் உறுதுணையாக இருந்து உதவியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நட்பையும்-உறவினையும்  என்றும் கைவிடாது  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக்கு உற்றத்

துணைவனாகவும்,

நம்பிக்கைக்குரிய‌ தோழனாகவும் செயலாற்றிடும் -இயங்கிடும் என்று இப்பெருமகிழ்வு நேரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் உறுதிபடத்தெரிவித்துக்கொள்கிறது.


இவண்,

(பெ.இரா.இரவி)

மாநிலத்தலைவர்

(முருகசெல்வராசன்)

மாநிலப் பொருளாளர்

(மன்றம் நா.சண்முகநாதன்)

பொதுச்செயலாளர்


புதுக்கோட்டை 

28.12.2021

Comments

Popular posts from this blog

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு