தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

(மாநில அமைப்பு)

++++++++++++++++++++


பெறுதல் 

மதிப்புமிகு.

பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,

பள்ளிக்கல்வி இயக்ககம்,

சென்னை-6.


மதிப்புமிகு ஐயா,

வணக்கம்.


பொருள்:பயிற்சி-

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு  10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு..


பார்வை:

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்  செயல்முறைகள்  ந.க.எண்:பிடி1/இ2/2021-22/நாள்:06.01.2022

+++++

தங்களிடம் கீழ்க்கண்டவற்றை எங்களது மாநில அமைப்பு கோருகிறது.


1.கொரோனா நுண்கிருமி இமாலய வேகத்தில் பாய்ந்து  பரவி வருவதாக  அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்‌ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில்  நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு உள்ளது.

போட்டித்தேர்வுகள் உள்ளிட்டு பல்வேறு வகைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.இத்தகு பெருந்தொற்று பரவல் வேகக்காலத்தில் 10.01.2022 முதல்  வலுவூட்டல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது கவலையைத்தருகிறது. 


2.கொரோனா நுண்கிருமி பரவல் வேகக் காலத்தில் ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளுக்கும்  ஒன்றியம் முழுவதில் இருந்தும்  நூற்றுக்கணக்கில் ஆசிரியப்பெருமக்களை வரவழைத்தும், வாரக்கணக்கில் ஒரே இடத்தில் பெருந்திரளாக  அமரவைத்தும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதென்பது நடைமுறையில் பெரும் சிரமத்தை-சிக்கலை ஏற்படுத்தக்கூடியதாகும்.இத்தகு பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசின் கொரோனா பரவல் தடுப்பு  நடவடிக்கைகளுக்கு நேர்எதிரானாதாகவே அமைந்துவிடும் வாய்ப்பையும் -வசதியையும் உருவாக்கித்தந்திடும் ஆபத்து நிறைந்தாகும்.


தாங்கள் மேற்கண்டவற்றை கனிவுடன்‌ பரிசீலித்து  10.01.2022 முதல்‌ நடைபெற உள்ள திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்புகளை ஒத்திவைத்து கொரோனா நுண்கிருமி பரவலைக் கட்டுப்படுத்தி உதவிட வேண்டுமாய் எங்களது மாநில அமைப்பின் சார்பில் பெரிதும் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.


மிக்கநன்றி


தங்கள் உண்மையுள்ள,


(மன்றம்.நா.சண்முகநாதன்)

பொதுச்செயலாளர்


புதுக்கோட்டை

09.01.2022


நகல்:

மதிப்புமிகு .

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்,சென்னை-6.

Comments

Popular posts from this blog

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇